Friday, January 8, 2010

நிப்டி எங்கே செல்கிறது ?

நிப்டி எங்கே செல்கிறது ?
நிப்டி நீண்ட கால அடிப்படையில் எங்கு பயணிக்கிறது என்பதை பின்வரும் படங்களில் technical indicators மூலம் அறியலாம்,




EMA CROSSOVER  என்பது LAGGING INDICATOR  அதாவது சந்தை நிகழ்வுக்கு பின் தகவலை தருவது ,சிவப்பு நிற EMA  க்கு மேல் சந்தை நன்றாக சென்ற பிறகுதான்
நீல நிற EMA வை சிவப்பு நிற EMA உடைத்து சென்றுள்ளது ,வட்டமிட்ட பகுதியில் TREND CHANGE  ஏற்பட்டுள்ளது , ஆக EMA  நீண்ட கால UPTREND ஐ உறுதி படுத்துகிறது, எனினும்

மேலுள்ள படத்தில் MACD CROSS OVER ஐ பார்க்கும் போது சந்தை நிகழ்வை உடனுக்குடன் தகவல் கிடைப்பதை அறிய முடியும், இதை லீடிங் இன்டிகேடர் என்று சொல்லுவோம், சரி இப்போது சந்தை எப்படி உள்ளது ?
வட்டத்தை பாருங்களேன் ! நீல நிற EMA ஐ சிவப்பு நிற  MACD  உடைக்கமுடியாமல் தள்ளாடுவதை ? ஆனால் முன்பே சிவப்பு  நிற MACD கீழ் முகமாக உடைத்து இறங்கி உள்ளதே ? ! சென்ற இடுகையில் குறிக்கப்பட்டுள்ள தாங்கு புள்ளிகளையும்,இலக்கு புள்ளிகளையும் பாருங்கள் இப்போது,5001,4943 என்ற புள்ளிகள்   சந்தைக்கு  எத்தனை பக்குவமாக பயன்பட்டது, ஆனால் மற்றவை ?
இனி பயன்படலாமே !, ஆம் சற்று இருங்கள் இன்னொரு படம் தருகிறேன்
 
நீண்டகால அடிப்படையில் நிப்டி பயணிக்கும் பாதை இது ,சரி சிவப்பு வட்டம் செல்லுமா ? அல்லது உடைபடுமா ? தடுப்பு புள்ளிகளை சொல்லுகிறேன், 5341,5388  இவை இரண்டும் எளிதாக உடைப்பட்டால் (படம்-2ல்)MACD மேல்நோக்கி நீலநிற EMA ஐ  உடைத்து கொண்டு (படம்-1 )சந்தையின் UPTREND யிலேயே பயணம் தொடரும்,
இல்லை என்றால் முந்தைய இடுகையில் உள்ள புள்ளிகள் இப்போது பயன்படுமே, தெளிவாக முடிவெடுக்க உதவி வேண்டுவோர் செல்பேசியில் அழைக்கலாம் , 
 தொடரும் சந்தையோடு நம் பயணமும்.. நன்றி
கவனமுடன் வணிகம் செய்து வெற்றி பெற வாழ்த்துகள் !,
மா.கருப்பண்ணன் M.Sc,M.B.A

NCFM-பயிற்சியாளர்

சேலம்-4 ,

93440-43142 , 93442-43142

salem.karuppannan@gmail.com

ncfmjob@gamil.com

sharetrainingcentre@gmail.com

Tuesday, December 15, 2009

நிப்டியின் நாளைய திசை ! . . . NIFTY TREND TOMMOROW !

நிப்டி திசை பற்றி சிறு ஆய்வை முன்வைக்கிறேன்.
 EMA, BOLINGER BAND ,  MACD   ஆகிய TOOLS  என்ன சொல்லுகின்றன என்பதை படங்கள் சொல்லுதே ! 

மேலுள்ள படங்களில் கிடைக்கும் தங்கு நிலைகள் 5001,4943,4860,4820
போன்றவை கிடைக்கின்றன, சரி விழுகின்ற சந்தை எதை நோக்கி  PATTERN STUDIES  என்ன சொல்லுகின்றன, இரட்டை உச்சி (DOUBLE TOP) தடுப்பு 5182 புள்ளியில் உள்ளது . மேலும் முந்தைய உயர்வின் போதும் இந்த புள்ளி முக்கிய தடுப்பாக இருந்துள்ளது.ஆக சந்தை திசை குறிப்பாக 4860 , 4425 என்ற புள்ளிகளை நோக்கி செயல் படும் என்பதை படம்-2 , படம்-4 ஆகியவை தெளிவாக்குகின்றன, கிழே உள்ள படம்  BOLLINGER  பட்டை தடுப்பு மற்றும் தாங்கு எல்லைகளை விளக்குகின்றன,


கவனமுடன் வணிகம் செய்து வெற்றி பெற வாழ்த்துகள் !,
நன்றி !
மா.கருப்பண்ணன் M.Sc,M.B.A
NCFM-பயிற்சியாளர்
சேலம்-4 ,
93440-43142 , 93442-43142
salem.karuppannan@gmail.com
ncfmjob@gamil.com
sharetrainingcentre@gmail.com
நிப்டியின் நாளைய திசை !

Monday, December 7, 2009

NIFTY - An overview

நண்பர்களே,
தேசிய பங்கு சந்தை இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் உள்ள எந்த ஒரு பொதுத  துறை  (CORPORATE /PSU) நிறுவனத்தின் பங்கையும் வாங்க விற்க ஏற்புடைய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.எனவே இங்கு நடைபெறும் பங்கு வணிகம் பெரிய அளவுடையதாக இருக்கிறது. சரி மஞ்சள், தக்காளி, கத்தரி என நாம் அன்றாடம் பயன்படுத்தும் சரக்குகளை கொண்டே NIFTY - ஐ புரிந்து கொள்வோம். காலையில் மார்க்கெட்டுக்கு போனிங்களே , விலைவாசி எப்படி ? என்று நண்பரோ, மனைவியோ கேட்டால் , கத்தரி , வெண்டை, தக்காளி, இப்படி எல்லாம் நேற்றைவிட இன்று அதிகம் என்றால் என்ன சொல்லுவோம் ? விலையெல்லாம் ஏறி போச்சுன்னு சொல்லுவோமில்ல , அப்படி முக்கியமான 50 பங்குகள கணக்குல வைச்சு  NSE சந்தை ஏற்றம் அல்லது இறக்கம் அப்படின்னு சொல்லுறாங்க , அதுதான் NIFTY- ங்கிற பெயரால சொல்லப்படுவது, இந்த ஏற்றம் அல்லது இறக்கம் நமக்கு பணம் பண்ண உதவுமா ? அட ஆமாங்க  , பின்ன எதுக்கு இந்த  BLOG ? ,நம்ம தமிழ் சமுதாயதுக்கு என்னால் முடியிறத செய்யனுமுன்னு நினைக்கிறேனில்ல  ,சரி மேட்டருக்கு வருவோம், இன்னிக்கு சந்தையில சரக்குகள் வெல ஏறி போயிடுமுன்னு நேத்தே எல்லாம் வாங்க சொன்னேனா இல்லையா ? அப்படி வீட்டில சொல்லுவாங்க இல்ல ,அப்படி தான் நாமும் விலை அதிகமாகுமுன்னா Nifty ய வாங்கணும் , லாபம் கிடசுட்ட வித்துட்டு வீட்டுக்கு வந்திடனும் ,இன்னொரு கை பாக்கிறதெல்லாம் இந்த சந்தைக்கு ஆகாது, உறவுகளே பணம் போனால் வராது, வந்தத பத்திரமா cheque போட்டு வாங்க கத்துக்கலன்னா , கதை முடிஞ்சிடும் , பொருள் புதையலான இந்த சந்தைய குறை சொல்லாதீங்க,  தொடரும்...