Sunday, July 25, 2010

கருத்து அரங்கமாகவே நடந்தது நம் பங்கு சந்தை கருத்தரங்கு !


நன்றி !      நன்றி !
ஞாயிறு பொழுதை நம் அரங்கில் பயன்படுத்திய கருத்துரை வழங்கியோருக்கும் , முதலீட்டாளர்களுக்கும்,அரங்கு நிறைய அமர செய்திட இரவு பகல் பாராது ஏற்பாட்டு பணிகளை செய்து தந்த தோழர்களுக்கும் , நிகழ்ச்சிக்கு பல்வேறு பணிகளை(அரங்க நிர்வாகம், ஒலி பெருக்கம் , மேடை அலங்காரம், ஒளிப்படங்கள்,வீடியோபதிவுகள்,விளம்பர பலகைகள் ,நோடீஸ்கள், நாளிதழ் விளம்பரங்கள் .....)சிறப்பாக செய்து தந்த அன்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி !  

ICSI திரு.சோலையப்பன் IPO வரை...
CHONA FINANCIAL திரு.பழனியப்பன் முதலீடும்,வணிகமும்....
CDSL திரு.வாசுதேவன் DEMAT - ல் பாதுகாப்புடன்  பங்குகள்...
NSE திரு.விக்னேஸ்வரன் கரன்சியில் வணிகம்...
MCX திரு.செந்தில்வேலன் COMMODITY -யில் வணிகம்...
ARUVI INSTITUTE திரு.கருப்பண்ணன் பங்குசந்தையில் வேலை,தொழில்..
SUN NEWS வர்த்தகஉலகம் திரு.ரெங்கராஜன் சந்தையின் எதிர்காலமும்,வெற்றி தரும்  உத்திகளும்...
முதலீட்டாளர்கள் ஆர்வத்தோடு நம்முடன்...
பயிற்சி மூலம் வெற்றி நடைபோடும் தொழில் முனைவோர்...
------------------------------------------------------------------------------
தெளிவை நோக்கி திரளாய்....
---------------------------------------------------------------------
இன்னும்  தேடலாம்...இமயத்திலும் கூடலாம்..

Friday, July 16, 2010

வந்தார் மேயர் ! திறந்தார் , புதிய அலுவலகத்தை !!

திரளாய் வந்து சிறப்பித்த அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி !
நம் அழைப்பிதழில் உள்ளபடி அனைத்து சிறப்பு விருந்தினரும் வந்தார்கள், சில படங்கள் மட்டும் நமக்கு இப்போது வந்துள்ளன, நேரில் வந்து சிறப்பிக்க நேரம் இல்லாத உங்களுக்காக இவற்றை பதிவு செய்கிறேன் ,
பார்த்து மகிழுங்கள் , வாழ்த்துங்கள் வளரவும் , நம்மை சார்ந்தாரை வளர்த்தெடுக்கவும் !நன்றி !

-மா. கருப்பண்ணன் ,வாழப்பாடி, சேலம், 93440 -43142மேயர் திறக்கிறார் ...
பயிற்சி அரங்கம் திறப்பது கண்ணன் பஸ் அதிபர் வரதராஜன் அவர்கள் ,.... 
தொழில் உலகம் மாத இதழ் ஆசிரியர் கணினியை இயக்கினார்,
அருகில் ராமவிலாஸ் பஸ் அதிபர் ........
வாருங்கள் கருத்தரங்கில் சந்திப்போம் !!
......

Sunday, July 11, 2010

ஜூலை 18 - ஆம் தேதி SEMINOR ! ! !

நீண்ட பயணத்தில் ஒரு படி உயர்வு !
இனி நம் பயிற்சி மையம் , INIT COMPUTERS BUILDINGS மேல் மாடியில் இயங்கும், புதிய அலுவலக திறப்பை

வணக்கத்திற்குரிய சேலம் மாநகர மேயர் திருமதி. ரேகா பிரியதர்சினி அவர்கள் 15 .7 .10 அன்று காலை 8 .30 மணிக்கு செய்து வைக்கிறார்,

 இவ்விழாவை முன்னிட்டு அதிகபட்சம் 300 பேர் அமரும் வகையில் ஜூலை 18 - ஆம் தேதி SEMINOR ஒன்று ஏற்பாடு செய்துள்ளேன், காலை 9 .30 மணி முதல் மாலை 3 .30 மணி வரை நடைபெறும் இந்த SEMINOR - க்கு சென்னையிலிருந்து SUN NEWS வர்த்தக உலகம்  TV நிகழ்ச்சிகளில் உரையாற்றும் திரு.ரங்கராஜன், பங்குசந்தைவல்லுநர் அவர்கள் வருகிறார் உடன் NSE , MCX ,CDSL வல்லுனர்கள் பங்குச் சந்தை குறித்து சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்கள், தரமான சிறப்பான வழிகாட்டல் இருக்கும்,முன் பதிவு கண்டிப்பாக அவசியம் , மதிய உணவுடன் நுழைவுக் கட்டணமாக Rs.200 மட்டும் வைக்கப்பட்டுள்ளது, நம் சுற்றமும்,நட்பும்,நலம்விரும்புவோரும் அவசியம் வந்து கலந்து கொண்டு பயன் பெற வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறேன் ! நன்றி !
பதிவுக்கு : 9344243142 , 9344043142 .,0427-4042142
புதிய அலுவலக முகவரி :
ARUVI INSTITUTE OF BUSINESS AND FINANCE ,
5/5, III-FLOOR, INIT COMPUTERS BUILDINGS,
NEW BUS STAND WEST,
SALEM-636009,

Sunday, July 4, 2010

சந்தை ?

 சென்றவார POST-ல் உள்ள முதல் படத்தில் வந்த முதல் தாங்கு நிலையை தொட்டு சந்தை மேலே உயர்ந்தாலும் 5336 என்ற தடுப்பை உடைக்காததால் உயராமல் இறங்க தொடங்கிஉள்ளது,
 இது மீண்டும் 5210 - 5190 நிலையை உடைத்தால் 5140 / 5110 / 5078 இலக்குகளை நோக்கி இருக்கும் , ஆனால் 5140 நிலை வலுவாக செயல்படும் , சந்திப்போம் .....