Friday, December 10, 2010

பங்கு வணிகமே தொழிலாக!

கடந்த ஞாயிறு அன்று நடந்த கருத்து வகுப்பில் கொடுத்த முக்கிய கருத்து "தொழில் முறை பங்கு வணிகர் " என்பது , பங்கு வணிகம் , மற்ற பொருள் வணிகங்களை போன்றதே என முதலிலேயே குறித்ததுதான் , ஒரு கூடுதல் வாய்ப்பு , பொருள் வணிகர் , கையில் உள்ள பொருளை மட்டும் விற்கலாம் , "இங்கே கையில் இல்லாத பங்கையும் விற்கலாம் , விலை குறையும் போது வாங்கி கொடுத்துவிடலாம்", இதை 'short selling' என்கிறோம் , ' short selling ' (விற்று-வாங்குதல்)செய்வோருக்கு குறைந்தபட்ச விலையை அறிந்துகொள்ளும் தொழில் நுட்பமுறை  தெரிந்திருக்க வேண்டாமா ? நுண்ணறிவு,தொடர் முயற்சி , அவசர உணர்வுகளை ஆளும் பொறுமை, சிறு இழப்புகளில் வெளியேற முடிவெடுக்கும் ஆளுமை , தொழில் நுட்ப கல்வியை கற்று கொள்ளும் தொடர் ஆர்வம் , நடைபெறுகிற சந்தையில் கற்றவற்றை பொருத்தி பார்க்கிற உடனே-தோன்றும் கூர்மை மதி, சிறிய அளவில் முதலிடும் திறன் இவைதான் ஒருவரை  தொழில் முறை வணிகராக மாற்றிக்கொள்ள தேவையானவை , சந்தையிலிட்ட முதலை நிர்வகிக்க தெரிந்தோரே
தொழில் முறை வணிகர் - " professional trader " பட்டறிவு தான் தரும் இந்த பட்டத்தை உங்களுக்கு , நாம் வழிகாட்டியே ....
இன்னும் சிந்திப்போம்,சந்திப்போம் ....

Sunday, December 5, 2010

கரடிகள் காத்திருக்கின்றன , கவனம் மிக அவசியம் ! ?

சந்தை மேல்முக பயணத்தை வெற்றிகரமாக தொடரவேண்டுமானால் நாளை 5970 க்கு மேல் LOW பதிவு செய்து 6020 / 6040 /6060 என்று மேல்முக இலக்குகளை கடக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது , இந்த வாரத்தை பொறுத்தவரை 5920 புள்ளியை உடைக்க கூடாது , கரடிகள் களமிறங்கி வைக்கிற விருந்தில் காளைகளும் கலந்து கொள்ளும் புள்ளி அது , முன்பாக 5970 என்ற புள்ளி உடைந்தாலே எச்சரிக்கை மணி அடிப்பதாக வைத்துகொள்ளலாம் , பயணம் புதிய உச்சத்தை நோக்கி அமைய வேண்டுமானால் 6090 ஐ முதலில் கடக்க வேண்டும் , அப்படியானால்  நாளை...(முதலிலிருந்து படிக்கவும்) , buy- sell செய்ய விரும்பினால் ஒரு PE வைத்துகொண்டு / அல்லது 5970 SL ஆக வைத்து கொள்ளவும் , 6040 தாண்ட மறுத்தால் விருந்தில் கலந்து கொள்ள தயாராக இருங்கள் ...  சந்திப்போம் ...

Thursday, December 2, 2010

தொடரும் .... பயணம் ?

5690 லிருந்து வளரும் சந்தை தன் பயணத்தை தொடருமா ?முன் சொன்னபடியே சில நாட்களாக buy -sell  போக்கிலேயே உள்ளதாலும் , வேறு சில பணிகளில் சிக்கி கொண்டதாலும் எழுத இயலவில்லை , இந்த பயணம் முடிவடைய 6005 / 6020 / 6090 ஆகிய புள்ளிகள் தடுப்பாக உள்ளன . இவற்றை கடந்தால் புதிய உச்சம் நோக்கிய பயணமாக மாற வாய்ப்புள்ளது ,இடையில் தடுப்புகள் உள்ளன , அவப்போது  அவற்றை பார்ப்போம் , அதுவரை  buy -sell  போக்கிலேயே செல்லலாம் , இதற்கான உடனடி SL 5890 ஐ வைக்கவும் . சந்திப்போம் ...