Tuesday, December 15, 2009

நிப்டியின் நாளைய திசை ! . . . NIFTY TREND TOMMOROW !

நிப்டி திசை பற்றி சிறு ஆய்வை முன்வைக்கிறேன்.
 EMA, BOLINGER BAND ,  MACD   ஆகிய TOOLS  என்ன சொல்லுகின்றன என்பதை படங்கள் சொல்லுதே ! 

மேலுள்ள படங்களில் கிடைக்கும் தங்கு நிலைகள் 5001,4943,4860,4820
போன்றவை கிடைக்கின்றன, சரி விழுகின்ற சந்தை எதை நோக்கி  PATTERN STUDIES  என்ன சொல்லுகின்றன, இரட்டை உச்சி (DOUBLE TOP) தடுப்பு 5182 புள்ளியில் உள்ளது . மேலும் முந்தைய உயர்வின் போதும் இந்த புள்ளி முக்கிய தடுப்பாக இருந்துள்ளது.ஆக சந்தை திசை குறிப்பாக 4860 , 4425 என்ற புள்ளிகளை நோக்கி செயல் படும் என்பதை படம்-2 , படம்-4 ஆகியவை தெளிவாக்குகின்றன, கிழே உள்ள படம்  BOLLINGER  பட்டை தடுப்பு மற்றும் தாங்கு எல்லைகளை விளக்குகின்றன,


கவனமுடன் வணிகம் செய்து வெற்றி பெற வாழ்த்துகள் !,
நன்றி !
மா.கருப்பண்ணன் M.Sc,M.B.A
NCFM-பயிற்சியாளர்
சேலம்-4 ,
93440-43142 , 93442-43142
salem.karuppannan@gmail.com
ncfmjob@gamil.com
sharetrainingcentre@gmail.com
நிப்டியின் நாளைய திசை !

Monday, December 7, 2009

NIFTY - An overview

நண்பர்களே,
தேசிய பங்கு சந்தை இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் உள்ள எந்த ஒரு பொதுத  துறை  (CORPORATE /PSU) நிறுவனத்தின் பங்கையும் வாங்க விற்க ஏற்புடைய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.எனவே இங்கு நடைபெறும் பங்கு வணிகம் பெரிய அளவுடையதாக இருக்கிறது. சரி மஞ்சள், தக்காளி, கத்தரி என நாம் அன்றாடம் பயன்படுத்தும் சரக்குகளை கொண்டே NIFTY - ஐ புரிந்து கொள்வோம். காலையில் மார்க்கெட்டுக்கு போனிங்களே , விலைவாசி எப்படி ? என்று நண்பரோ, மனைவியோ கேட்டால் , கத்தரி , வெண்டை, தக்காளி, இப்படி எல்லாம் நேற்றைவிட இன்று அதிகம் என்றால் என்ன சொல்லுவோம் ? விலையெல்லாம் ஏறி போச்சுன்னு சொல்லுவோமில்ல , அப்படி முக்கியமான 50 பங்குகள கணக்குல வைச்சு  NSE சந்தை ஏற்றம் அல்லது இறக்கம் அப்படின்னு சொல்லுறாங்க , அதுதான் NIFTY- ங்கிற பெயரால சொல்லப்படுவது, இந்த ஏற்றம் அல்லது இறக்கம் நமக்கு பணம் பண்ண உதவுமா ? அட ஆமாங்க  , பின்ன எதுக்கு இந்த  BLOG ? ,நம்ம தமிழ் சமுதாயதுக்கு என்னால் முடியிறத செய்யனுமுன்னு நினைக்கிறேனில்ல  ,சரி மேட்டருக்கு வருவோம், இன்னிக்கு சந்தையில சரக்குகள் வெல ஏறி போயிடுமுன்னு நேத்தே எல்லாம் வாங்க சொன்னேனா இல்லையா ? அப்படி வீட்டில சொல்லுவாங்க இல்ல ,அப்படி தான் நாமும் விலை அதிகமாகுமுன்னா Nifty ய வாங்கணும் , லாபம் கிடசுட்ட வித்துட்டு வீட்டுக்கு வந்திடனும் ,இன்னொரு கை பாக்கிறதெல்லாம் இந்த சந்தைக்கு ஆகாது, உறவுகளே பணம் போனால் வராது, வந்தத பத்திரமா cheque போட்டு வாங்க கத்துக்கலன்னா , கதை முடிஞ்சிடும் , பொருள் புதையலான இந்த சந்தைய குறை சொல்லாதீங்க,  தொடரும்...

Tuesday, November 3, 2009

சோதனை இடுகை

சற்று பொறுங்கள்,

இனி நாள்தோறும் NIFTY(நிப்டி)-ஐ தொழில் நுட்ப பகுப்பு (technical analysis)அடிப்படையில் வாங்க விற்க ஏற்புடைய புள்ளிகளையும் ,தாங்கு நிலை(SupportLevel), தடுப்பு நிலை (ResitanceLevel), இழப்பு நிறுத்த(stoploss) புள்ளிகளையும் நாள்தோறும் வெளியிட திட்டமிட்டுள்ளேன் ,பங்கு வணிகம் செய்யும் தமிழ் நண்பர்கள் பொருள் சேர்க்க வேண்டும் , இழக்ககூடதல்லவா ?

நான் மா. கருப்பண்ணன் (NCFM training centre / பயிற்சி மையம் salem),
நன்றி !