Thursday, December 30, 2010

உடனடி இலக்கான 6100 ஐ தொட்டது NIFTY

 இனி என்ன ? படமாக .......
2011 - இனிய கிருத்துவ புத்தாண்டு வாழ்த்துகள்!

Monday, December 27, 2010

திக்கு தெரியாத காட்டில் மாட்டிகொண்டதா ? நிப்ட்டி

ஞாயிற்று கிழமை BSE நாணயம் இதழுடன் நடத்திய முதலீட்டாளர் நிகழ்ச்சியில் நாம் கலந்து கொண்டோம் , படம் இணைக்கப்படும் ,

இனி சந்தை : நீண்ட கால சுழலில் , நடுத்தர சுழலில் , உடனடி சுழலில் வாங்கி விற்கும் வணிக முறைகளில் சந்தை செயல் பட்டாலும் நடுத்தர சுழலில் சறுக்கி விற்று வாங்கும் முறைக்கு மாறிவிடுமோ என்ற நிலைக்கருகில் சந்தை தள்ளப்பட்டுள்ளதால் , நாணயம் இதழில் தொடர்ந்து NIFTY கணிப்பை எழுதும் Dr.கார்த்திகேயன் இந்தவாரம் விட்டு அடுத்தவாரம் எழுதுவதாக மேற்சொன்ன நிகழ்ச்சியில் சொன்னார் , சரி , நாம் என்ன வணிகம் செய்யலாம் ? என்பவர்களுக்கு 

திங்களுக்கான கணிப்பு : -
இந்த வார கணிப்பு : -

சந்திப்போம் .............................................................................................................................................


Saturday, December 18, 2010

சந்தையின் நிலைதான் என்ன ?

உடனடி சந்தை 6338 - 6069 - 5956  வழியாக வரும் நேர்கோடு உடைக்க படலாம் , உடைந்தால் புதிய உச்சத்தை நோக்கியமையும் பயணமாக தெரிகிறது ,சந்தை நிலைகுறித்து முன் சொன்னதை நினைவு கூர்வோம்,http://tamilpangusandhai.blogspot.com/2010/11/blog-post_07.ஹ்த்ம்ல்
சந்திப்போம்.....

Wednesday, December 15, 2010

உயரவா ? இந்த மென்மையான பயணம்

சந்தையை பொருத்தவரை படத்தில் உள்ளபடி மேல்முகத்தில் " trendline " தடுப்பை 5965 -5980  என்ற பட்டையை உடைத்தால் இன்று முதல் விரைவாக மேல்முகத்தில்  பயணிக்கும் , LONG SL 5840 க்கு நகர்நதுள்ளது, இன்று மிக முக்கிய  நாளாக கருதலாம் ,
 FI - நிதி நிறுவனகளின் செயல் செல்லிங் ஆக இருப்பின் இறங்குமுகம் தொடர வாய்ப்பு உள்ளது , 5980 க்கு அருகில் SHORT உருவாக்கலாம், உடைத்தால் 6100 வரை உடனடியாக உயர்வுக்கு வாய்ப்புள்ளதால் 5985 SL அவசியம் ,....

Sunday, December 12, 2010

கரடியின் பிடி தளர்கிறதா ?

கரடியின் பிடி தளர்கிறதா ?ஆம் என்றால் ,5935 - 40 பட்டையில் உள்ள தடுப்புகளை உடைக்கும் , உடைக்க இயலாதெனின் உடனடியாக 5770 க்கு அருகிலுள்ள தாங்குநிலையை உடைத்து 5660 என்ற புள்ளியை நோக்கி பயணம் தொடர்ந்து 5640 /5580 என பயணிக்கும் , short வைத்துள்ளோருக்கான SL  5950 இதை சந்தை உடைத்தால் வாங்கி விற்கும் "buy-sell" முறைக்கு வணிகத்தை மாற்றிக்கொள்ளலாம் ,நாளை 5878 - 5890 க்கு அருகில் கீழ் முகம் திரும்பினால் short செய்யலாம் , SL முன்சொன்னதுதான், உடனே  "buy-sell" முறைக்கு வணிகத்தை மாற்ற விரும்பினால் 5770 ஐ SL வைப்பது அவசியம் ,....

Friday, December 10, 2010

பங்கு வணிகமே தொழிலாக!

கடந்த ஞாயிறு அன்று நடந்த கருத்து வகுப்பில் கொடுத்த முக்கிய கருத்து "தொழில் முறை பங்கு வணிகர் " என்பது , பங்கு வணிகம் , மற்ற பொருள் வணிகங்களை போன்றதே என முதலிலேயே குறித்ததுதான் , ஒரு கூடுதல் வாய்ப்பு , பொருள் வணிகர் , கையில் உள்ள பொருளை மட்டும் விற்கலாம் , "இங்கே கையில் இல்லாத பங்கையும் விற்கலாம் , விலை குறையும் போது வாங்கி கொடுத்துவிடலாம்", இதை 'short selling' என்கிறோம் , ' short selling ' (விற்று-வாங்குதல்)செய்வோருக்கு குறைந்தபட்ச விலையை அறிந்துகொள்ளும் தொழில் நுட்பமுறை  தெரிந்திருக்க வேண்டாமா ? நுண்ணறிவு,தொடர் முயற்சி , அவசர உணர்வுகளை ஆளும் பொறுமை, சிறு இழப்புகளில் வெளியேற முடிவெடுக்கும் ஆளுமை , தொழில் நுட்ப கல்வியை கற்று கொள்ளும் தொடர் ஆர்வம் , நடைபெறுகிற சந்தையில் கற்றவற்றை பொருத்தி பார்க்கிற உடனே-தோன்றும் கூர்மை மதி, சிறிய அளவில் முதலிடும் திறன் இவைதான் ஒருவரை  தொழில் முறை வணிகராக மாற்றிக்கொள்ள தேவையானவை , சந்தையிலிட்ட முதலை நிர்வகிக்க தெரிந்தோரே
தொழில் முறை வணிகர் - " professional trader " பட்டறிவு தான் தரும் இந்த பட்டத்தை உங்களுக்கு , நாம் வழிகாட்டியே ....
இன்னும் சிந்திப்போம்,சந்திப்போம் ....

Sunday, December 5, 2010

கரடிகள் காத்திருக்கின்றன , கவனம் மிக அவசியம் ! ?

சந்தை மேல்முக பயணத்தை வெற்றிகரமாக தொடரவேண்டுமானால் நாளை 5970 க்கு மேல் LOW பதிவு செய்து 6020 / 6040 /6060 என்று மேல்முக இலக்குகளை கடக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது , இந்த வாரத்தை பொறுத்தவரை 5920 புள்ளியை உடைக்க கூடாது , கரடிகள் களமிறங்கி வைக்கிற விருந்தில் காளைகளும் கலந்து கொள்ளும் புள்ளி அது , முன்பாக 5970 என்ற புள்ளி உடைந்தாலே எச்சரிக்கை மணி அடிப்பதாக வைத்துகொள்ளலாம் , பயணம் புதிய உச்சத்தை நோக்கி அமைய வேண்டுமானால் 6090 ஐ முதலில் கடக்க வேண்டும் , அப்படியானால்  நாளை...(முதலிலிருந்து படிக்கவும்) , buy- sell செய்ய விரும்பினால் ஒரு PE வைத்துகொண்டு / அல்லது 5970 SL ஆக வைத்து கொள்ளவும் , 6040 தாண்ட மறுத்தால் விருந்தில் கலந்து கொள்ள தயாராக இருங்கள் ...  சந்திப்போம் ...

Thursday, December 2, 2010

தொடரும் .... பயணம் ?

5690 லிருந்து வளரும் சந்தை தன் பயணத்தை தொடருமா ?முன் சொன்னபடியே சில நாட்களாக buy -sell  போக்கிலேயே உள்ளதாலும் , வேறு சில பணிகளில் சிக்கி கொண்டதாலும் எழுத இயலவில்லை , இந்த பயணம் முடிவடைய 6005 / 6020 / 6090 ஆகிய புள்ளிகள் தடுப்பாக உள்ளன . இவற்றை கடந்தால் புதிய உச்சம் நோக்கிய பயணமாக மாற வாய்ப்புள்ளது ,இடையில் தடுப்புகள் உள்ளன , அவப்போது  அவற்றை பார்ப்போம் , அதுவரை  buy -sell  போக்கிலேயே செல்லலாம் , இதற்கான உடனடி SL 5890 ஐ வைக்கவும் . சந்திப்போம் ...

Friday, November 26, 2010

ஞாயிறு மாலையில் பயன்பாட்டு வகுப்பு :-

" MONEY MANAGEMENT FOR PROFIT IN STOCK-MARKET"
என்ற தலைப்பில் வரும் ஞாயிறு மாலை 3 மணி முதல் 6 மணி வரை ஒரு பயன்பாட்டு வகுப்பு நடத்த இருக்கிறோம் , ஆர்வமுள்ளோர் கலந்து கொள்ளலாம் , கட்டணம் ரூ.1000 / -மட்டும் வைத்துள்ளோம் , நமது CLIENT களுக்கு அனுமதி கட்டணம் ஏதும் இல்லை ,
பதிவுக்கு : - 9344043142  அல்லது 9344243142 என்ற எண்களில் அழைக்கலாம் .
இறக்கம் இன்னுமா? 

படம் உடனடி support  வரும் புள்ளிகளை தெளிவுபடுத்துகிறதே ,

Wednesday, November 24, 2010

கரடிகளின் களமாகிவிட்டது :-


5966 ஐ உடைத்து சந்தை மேல்நோக்கி வந்தபோதிலும் அருமையான H  & S கொடுத்து சந்தை இறக்கத்தில் சென்று முடிந்து விட்டது, இனி கரடிகளின் களமாகிவிட்டது, வாங்கி விற்க  விரும்புவீர்களானால் 5890 மேல் சந்தை பயணித்த பிறகு 5865 இழப்பு நிறுத்தமாக வைத்து வணிகம் செய்யலாம் , ஆனால் ஆனால் என்ன ? 5925 -5945  அருகில் மிக முக்கிய தடுப்பு உருவாகியுள்ளது , அங்கே வெளிவர தயாராக இருக்கவேண்டும் ,விற்றுவாங்குவோர் நுழையுமிடம் அது, gap-down நிகழவும் வாய்ப்புள்ளது , சந்திப்போம் ...

Tuesday, November 23, 2010

சந்தை ?

5966 உடனடியாக உடைக்கப்பட்டு மேல்நோக்கி வரவேண்டும் , அடுத்து முன்சொன்ன 6045 க்கு மேல் முடிவடைய வேண்டும் , அப்படி நடந்தால் கீழ் நோக்கிய பயணத்தில் நடைபெறும் PULL -BACK  ன் இலக்கு 6095 வரை இருக்கலாம் , 5878 இறக்கத்தில் உடைந்தால் விற்கலாம் ,இறக்கம் 5830 அல்லது 5790 - 5770 வரை நிகழ வாய்ப்புள்ளது ,   சந்திப்போம் ... 

Monday, November 22, 2010

ஏற்றம் தொடருமா ?

5960 உடையாமல் உயர்ந்தால் ஆம் , அதாவது SL for LONG வாங்கி வைத்திருந்தால் இப்புள்ளியில் இழப்பு நிறுத்தத்தை வைக்க வேண்டும் , இன்னும் வார அறிகுறிகள் மேல்முகத்திற்கு திரும்ப வில்லை , கவனம் அவசியம் , 6045 /6100 /6130  கடக்க வேண்டிய முக்கிய தடுப்புகள் , நன்றி சந்திப்போம் ....

Sunday, November 21, 2010

சிறு மேல்நோக்கிய பயணம் இருக்க வேண்டும் ?!

இந்த வார டிரேடிங் எல்லைகளாக 5690 - 6250 இருக்கலாம் , ஆனால் உடனயாக 6045 க்கு மேலும் தொடர்ந்து 6130 க்கு மேலும் சந்தை முடிவடைய வேண்டும் , அப்போது தான்  மேல் எல்லைக்கு அருகில் வார வாய்ப்பு வரும் , 5850 நல்ல தாங்கு நிலையாக செயல்பட வாய்ப்புள்ளது , தவறினால் 5780 வரையிலும் பின் அடுத்த சரிவில் 5755 / 5720 ஆகிய புள்ளிகளை நோக்கி சரிய வாய்ப்பாகிவிடும் ,..
இறங்குமுக உடனடி (short -term)திசையில் சந்தை பயணித்தாலும் அதிக விற்பனை (oversold) பகுதியை அடைந்திருக்க வாய்ப்புள்ளது , சிறு மேல்நோக்கிய பயணம் இருக்க வேண்டும் , அதனால் வார தொடக்கம் +ஆக இருந்தால் 5850 ஐ இழப்பு நிறுத்தமாக கொண்டு 6045  புள்ளியை தொடும் வரை வாங்கி விற்கலாம் , கீழ் நோக்கிய பயணம் தொடருமானால் அப்புள்ளிக்கு அல்லது 6130 க்கு அருகில் கீழ் முக திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதால் திசைக்கு   ஏற்ப மாறி கொள்வது  அவசியம் ,சந்திப்போம்.

Tuesday, November 16, 2010

கரடி சந்தை துவங்கிவிட்டதா ?

அப்படியானால் எப்படி தெரிந்துகொள்வது ?
படம் சொல்லுகிறது பாருங்கள் , உடனடி திசை (short - term trend)க்கான தாங்கு நிலைகளை (support levels)

Monday, November 15, 2010

6090-6151 இடையிலேயே ஊசலாடும்....?

important support levels 6080 /6095 / 6108
important resistance levels 6150(previous peak on upmove 6151) / 6165 / 6174

இரண்டாம் தடுப்புக்குள்(6165) திரும்பினால் நல்ல இறக்கம் ஏற்படும் நாளாகும்,
பதிலாக 6090 - 95 அருகில் LOW பதிவானால் சந்தை மேல்முக திருப்பத்திற்கு வாய்ப்பாக அமையும் ,
6090-6151 இடையிலேயே ஊசலாடவும் வாய்ப்புள்ளது ,..

அடுத்து ?

சந்தை மேல் நோக்கி வந்தால் 6122 / 6165 / 6197 / 6235  ஆகிய புள்ளிகள் தடுக்க தயராக உள்ளன,  இந்த புள்ளிகளில் எங்கிருந்து கீழ் நோக்கி திரும்பினாலும் விற்று வாங்க ஏற்புடை சந்தையாக இருக்கும் , 6235 - க்கு   மேல் வந்தால் மீண்டும் புதிய உச்சம் தான் ,...
6071 என்பது தற்போது முடிவடைந்த புள்ளி , 6015 என்ற புள்ளியை உடைத்து தொடர்ந்து இறங்கினால் படம் சொல்லுவதை பார்த்துகொள்ளவும் , நன்றி .. சந்திப்போம் .

Saturday, November 13, 2010

புதிய இணைப்புகள் !

இப்பொழுது மேலே  Menu bar இல் உள்ள
போன்ற  இந்த இணைப்புகள் இயங்கும் நன்றி !



Wednesday, November 10, 2010

6243 புள்ளியில் திரும்பியுள்ளதால் ?

6243 புள்ளியில் திரும்பியுள்ளதால் இன்று 6280 கீழே செல்லாமல் 6340 உடைத்தால் சந்தை நேற்று முன்தினம் சொன்ன இலக்குகளை நோக்கி பயணிப்பது உறுதியாகிறது .
supports  6280 / 6267 / 6245
Resistances  6335 / 6353 / 6368

Tuesday, November 9, 2010

இறங்குவது தாண்டவா? தடுமாறவா?

மேல்முகமான பயணம் தொடர வேண்டுமானால் 6220 -6245 என்ற நிலைகளில் இந்த இறக்கம் முடிவடைந்துவிடும் , மிக அதிக ஆனால் மேல்முக பயணத்திற்கு பாதிப்பில்லா இறக்கம் என்றால் அது 6180 என்ற புள்ளியாக இருக்கும் , அதற்கும் கீழிறங்கினால் மீண்டும் 5900 -  5800 ஐ சந்திக்க செல்லுகிறது என்று பொருள் ...

Monday, November 8, 2010

புதிய உச்சத்தை நோக்கி !

இந்திய சந்தை நீண்ட கால (LONG TERM) காளை சந்தை என்பதை நாம் நினைவு கூர்வோம் ,
http://tamilpangusandhai.blogspot.com/2010/01/blog-post.html  இணைப்பில் பாருங்கள் ,
எனவே முதலீட்டாளர்கள் ஒவ்வொரு இறக்கத்திலும் நல்ல பங்குகளை வங்கி சேர்க்கலாம் , மாதந்திர சேமிப்பை சந்தையில் இட்டு வைப்பதை அவசியம் கடைபிடிக்க வேண்டும் ,..
தொட்ட உச்சம் 6357 அருகில் சந்தை ஒரு வேகத்துடன் ஏற்ற இறக்கம் கண்டு பின் மெதுவாக மேல் நோக்கி பயணிக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள் , வணிகம் செய்வோர் கவனித்து செயல் படவும்...இந்த வாரத்தை பொறுத்த வரை 6399 / 6435 என்ற இலக்குகளை நோக்கி சந்தை பயணிப்பதாக தெரிகிறது ,ஆனால் படத்தில் உள்ள gap - களை நிரப்ப சந்தை வர வாய்ப்புகள் உள்ளது , அதுவும் volatile என்று சொல்லும் அதிர்வுக்குட்பட வாய்ப்புள்ளது , 6235  என்ற புள்ளியை உடைக்காமல் இருந்தால் மேல்நோக்கிய பயணம் தொடரும் , அதாவது LONG வைத்துள்ளோர் SL இது .
நன்றி சந்திப்போம்....

Tuesday, November 2, 2010

முதலாமாண்டு பிறந்தநாள்!

முதலாமாண்டு பிறந்த நாள் ,
நீங்களும் பாருங்க
http://tamilpangusandhai.blogspot.com/2009/11/sodhanai-idugai.html
அது மட்டுமில்ல 5000 பார்வைகளை இன்று தாண்டியுள்ளோம், பயன் பெறுவோர் பெருகட்டும், மகிழ்ச்சி மலரட்டும்
நன்றி
மா . கருப்பண்ணன்
sharetrainingcentre@gmail.com

Thursday, October 28, 2010

தன் வழியே தான் செல்லும் சந்தை (moves with its trend)

Wednesday, October 27, 2010

கடைசி வியாழன் ?

இனியும் தயங்காமல் வாருங்கள் தோழர்களே ! http://tamilpangusandhai.blogspot.com/2010/08/blog-post_08.ஹ்த்ம்ல் , நாளை நமதே !

Tuesday, October 26, 2010

NIFTY - ல் நாள் ஒன்றுக்கு 20 புள்ளிகள் ? !


பயனடைய விரும்புவோர் மேலும் தொடர : http://tamilpangusandhai.blogspot.com/2010/08/blog-post_08.html

Monday, October 25, 2010

நாளை ?

Thursday, October 21, 2010

பயம் வேண்டாமே ! ?

Wednesday, October 20, 2010

எமது சந்தை கணிப்பை பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !

எமது சந்தை கணிப்பை பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !

வெளியூரில் இருந்து  அழைத்து பேசிய நண்பர்களுக்கு ஒரு நினைவூட்டலுக்காக
http://tamilpangusandhai.blogspot.com/2010/08/blog-post_08.html இந்த இணைப்பை வைக்கிறேன்
வாருங்கள் , தோழர்களே , வெற்றிக்கான முயற்சி இது , நீங்களும் துவளாமல் கவனித்துக்கொள்ள எம் சேவை கிடைத்திடும் , நன்றி .

Tuesday, October 19, 2010

சருக்குதல் தொடரலாம் ?

இன்றைய post இல் குறிப்பிட்ட 6145 ஐ சந்தை உடைத்து சந்தை முடிவடையாதது , சருக்குதலை உறுதி செய்கிறது , நாளை 5985 என்ற புள்ளி உடைந்தால் இறங்குமுகம் தொடர்வது உறுதி செய்யப்படும் ,அப்படி நடந்தால் உயர உயர விற்று வாங்குதலை
 5960 - 5930  கட்டம் அடையும்  வரை தொடரலாம்  ,


sell with SL 6085 TGT 6010 / 5985 / 5965 breave hearts 5940-5935
if not 6010 broken BUY with SL 5960 TGT 6050 / 6065 / 6085
alert 1 :- if 5930 broken short term target 5860
alert 2 :- if gap up and quick move above 6065 buy with SL 6060 and sustains above 6085 bravely hold 

Monday, October 18, 2010

இடுகையில் சொன்ன இறங்குமுக இலக்கு அடைந்து விட்டோம்

முந்தைய இடுகையில் சொன்ன இறங்குமுக இலக்குகளை   இன்று அடைந்து விட்டோம் 

நாளை சந்தைக்கான tech அனலிசிஸ்  

Saturday, October 16, 2010

தமிழிய சிந்தனை :-
பெரியார் வந்திராவிட்டால் தமிழர் வாழ்வில் இவ்வளவு விரைவாய் கல்வி வந்திருக்காது,
இன்று நம் இளைஞர்கள் IT துறை போன்றவற்றில் சம்பாதிப்பது இந்த கல்வியால்தானே ,
பெரியார் சொன்னதன் நோக்கமெல்லாம் செய்யும் செயலை அறிவுக்கண் கொண்டு பார்த்து பிறகு துவங்கு என்பதே, உள்நோக்கோடு ஆதிக்கம் செய்யும் கூட்டமொன்று வெளிநாட்டிலிருந்து வந்திங்கு கடவுளின் பெயரால் சிந்தனை மழுங்க, அறிவுக்கு ஏற்பிலாவற்றையும் பரப்பினர் , புகுத்தினர் , ஆங்கிலேயர் அடக்கி ஆண்டது புரிந்த நமக்கு இந்த ஆரியக் கூட்டத்தின் ஆதிக்கம் புரியவில்லை , வாழைபழத்தில் ஊசிபோல நம்மோடு ஒட்டி உறவாடி தமிழில் களைகளை புகுத்தி ஆயிரமாண்டுகளுக்கு மேலான இந்த வித செயல்களில் இருந்தோரை நாம் புரிந்துகொள்ள கடவுளை மறுத்தார் , வேர் போனால் மரம் போகுமில்லையா ? சிந்தித்தார் நமக்காக , இன்று நமக்கு அறிவு விடுதலை ஓரளவுக்கு பெற்றுள்ளோம் , தமிழர்கள்  பண்டிகைகள் கொண்டாடும்போது சிறிது சிந்தித்து செயல் படவேண்டும் , ஆதிக்க கூட்டத்திற்கு சாதகமான வற்றை தவிர்ப்பதே ,
நாம் அறிவு விடுதலை பெற்றதன் அடையாளம் ...

இந்த post -ஐ நண்பர் திரு .ராஜசேகரன் தூண்டலோடு இங்கு இடுகிறேன் ,சிறுசெயலேனும் சமுதாய கண்ணோட்டத்தில் செய்ய ஒவ்வொருவரும் ஆர்வம் காட்டினால் தியாகிகள்(துறவு) தேவை படமாட்டார்கள் ..உறவு பின் துறவு

இதுவே தமிழர் வாழ்வியல் தத்துவம் ... சிந்திப்போம் ....

Friday, October 15, 2010

இப்பொழுது ! ?


Thursday, October 14, 2010

ஏறுமுகம் தொடர்கிறதா ?

15 /10 /10 க்கான NIFTY அனலிசிஸ் 
NIFTY இன்று :- (14 /10 /10)

NIFTY UPDATE for long position holder( 03:18 pm)

Tuesday, October 5, 2010

உழவர்களே ! தொழில் ஆர்வலர்களே! வாருங்கள் !

புதுவையில் வேளாண் திருவிழா !
விவசாயி மற்றும் தொழில் உலகம் மாத இதழ்கள் புதுவை அரசுடன் இணைந்து நடத்தும்
கண்காட்சி இது , 7 முதல் - 10 தேதி வரை நடை பெறும் , நானும் இங்கு தான் இருக்கிறேன் , வாருங்கள் , பயன்பெறுங்கள் , என்று அன்புடன் அழைக்கிறேன் . மா.கருப்பண்ணன் செய்தியாளர் .





நாளை சந்தை :-


Monday, October 4, 2010

நம்பிக்கை ஊட்டும் சந்தை ? !

 வாரன் சொன்னார் , ஒரு தொழில் நுட்பம் , படித்தேன் , சொல்கிறேன் , உங்களுக்கும் , கடைதெருவுக்குள் சென்று கொண்டிக்கும்  போது 4 - ம் தர மக்களும் சந்தைக்கு இலக்கை சொல்வார்கள் , நம்பிக்கை ஊட்டுவார்கள் , அதுவே நாம் சந்தையிலிருந்து வெளியேற சரியான நேரம்,இதை எல்லா வணிக தொலை காட்சிகளும் உறுதி செய்யும் அதாவது , சந்தையின் வலிமையை புகழ்ந்து பேசுவார்கள் , என்றார்...

அக்டோபர் 3 -ஆம்தேதி trading steps என்ற தன்னுடைய blog site - ல் சுகானி சொன்னார் , தான் முடி திருத்தும் சலூனில் முடிவெட்டும் வல்லுநர் சந்தையின் போக்கு சிறப்பாக உள்ளது,  சந்தையில் முதலிட போவதாக சொன்னாராம். இரண்டுக்கும் தொடர்பிருந்தால் , தொலைக்காட்சிகளும் புகழ்ந்தால் அதேதான்..., இல்லாவிட்டால் இல்லை ,...

சரி சந்தை மேலே செல்லுமா? கேட்கிறீர்கள் , புரிகிறது, ஆம் செல்லும் , இப்போது எல்லாம் ஏறுமுகம் தான் , ஆனால் சந்தைக்கு எப்போதும் இருமுகமுண்டு மறக்காமல் லாபம் பார்த்தவுடன், வந்திடலாம் ...சரிதானே ...

அக்டோபர் 4 க்கு 6104 புள்ளியை அல்லது  6060 யை LOW ஆக கொண்டு சந்தை மேலெம்பினால் 6180 / 6205 / 6230 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும்...வாங்கி விற்க ,,,,

Monday, September 27, 2010

பாதையும் பயணமும் !


30.09.10
தடை என்ன என்று தள்ளி நின்று பார்த்தால் தானே புரிகிறது,
சந்தை பயணத்தில் மேல் விளிம்பு தடுக்கிறது,
இறங்கினால் பச்சை வண்ண கோட்டை பார்த்துக்கொள்ளவும் .

அசையா சொத்து /


 PHYSICAL ASSET WANT TO BUY @ SALEM ?

சேலம் புதிய பஸ் நிலையத்திலிருந்து 10 - வது கிலோமீட்டரில் ஏற்காடு அடிவார பகுதியில் நண்பர்கள் மனை பிரிவுகள் அமைத்துள்ளார்கள், விரும்புவோர் தகவலேட்டில் உள்ள எண்களில் அழைத்து பயன்பெறலாம். நன்றி

Monday, September 13, 2010

சறுக்குகிறதா சந்தை ?

செப்டம்பர் 16
KEY SUPPORTS 5732 / 5600-5578
ஏற்றம் எதுவரை ?                 
செப்டம்பர் 15 2010  8 : 50 pm   
இலக்கு எதுவரை என்று சொல்லுங்களேன் என்று கேட்ட நண்பர்களுக்காக இந்த படம் புள்ளிகளும் குறிக்கபட்டுள்ளது .
செப்டம்பர் 14 2010  8 : 50 pm 

சந்தை புதிய உச்சத்தை தொட்டு தொட்டு அசத்துகிறதே தொடருமா இந்த பயணம் ? பாருங்கள் , நீங்களும் !

ஏற்றம் எதனால் ?

 ஏற்றம் எதனால் ?

Thursday, September 9, 2010

இலக்கு?

Sunday, September 5, 2010

செய்தி சொல்லும் படம் !


சந்திப்போம்

Tuesday, August 31, 2010

DOW இறங்க தொடங்கி 4-மாதம் ஆகியுள்ளது ? !




முக்கியமான தடுப்பு நிலைகள் 5447, 5474, 5495 
pull - Back நிகழ்ந்தால் மேற்கண்ட புள்ளிகளில்  கவனமாக வணிகம் செய்ய மறக்க வேண்டாம் , நன்றி !
குறிப்பு : DOW இறங்கிய 4-மாதங்களில் nifty முன்பு(ஜன-08) இறங்கு முகம் காட்டியது , இப்போது DOW இறங்க தொடங்கி 4-மாதம் ஆகியுள்ளது கவனிக்க வேண்டியுள்ளது .
விற்று வாங்குதல் வணிக முறையை technical levels அடிப்படையில் செயல் படுத்துவது நல்லது.

Monday, August 30, 2010

OPTION STRATEGY-01 contnd..

BOOK PROFIT
ஆகஸ்ட் 19 -ல் வெளியிட்ட போஸ்ட் -இல் உள்ள option strategy contnd ...
book profit 3lots PE 5400 NIFTY Rs.112 
average Rs.80 ,
112-80 = 32*3*50  =Rs.4800//
நன்றி

Friday, August 27, 2010

PULLBACK / FALLING RALLY ?

IMPORTANT SUPPORTS : -  5385/5300

Thursday, August 26, 2010

அடுத்து எங்கே ?

Tuesday, August 24, 2010

DJIA ?


நம் சந்தை அல்ல DJIA dow market ,....

Sunday, August 22, 2010

சந்தை பற்றி இரு வேறு பார்வைகள்...


சந்தையை பற்றி பிரபலங்கள் சொல்வதென்ன என  கேட்டு பார்த்தேன் , உங்களுக்கும் தெரியட்டுமே ,


1)  fresh call(only very risky traders and small lots), short nf near 5550 sl 5580 tgt 5450 near term, spot basis
if anyone wants to hedge the nf short for monday morning, buy 2 lots nifty 5500 strike calls now per lot nf at 41-42 or near cmp - நன்றி நண்பர் சோம் குவார் .,


2)



 --நன்றி  லஷ்மி ராமசந்திரன் ,


இவ்வாறு , இரு வேறு பார்வைகள் தான் சந்தை பற்றி , இப்போது சுதர்சன் சொன்னது மிகவும் பயன் படும் . பங்கு வணிகம் என்றாலே ,.. நிகழ்தகவு (probability) தான் , ஒன்று நீங்கள் நினைத்த அல்லது கணித்த திசையில் சந்தை செல்வது அல்லது எதிர் திசையில் செல்வது , Trade with SL or Hedge with options  அவ்வளவு தான் , இப்போது நம் சென்ற 3 postகளை பார்த்தால் உங்களுக்கும் புரியும்  நாம், ஏன் ? option இணைத்து position எடுக்க சொன்னோம்  என்று ,.ஒன்று சந்தை வேகமாக நகரவேண்டிய இடத்தை தொட்டிருக்கிறது என்பது உறுதி  .. சந்திப்போம் .

Thursday, August 19, 2010

trend chennal

TREND chennal -ஐ பின்தொடரலாம் ..5560௦-5580  தடுப்பு நிலை . இறங்கினால் 5440௦-5410 /5380
தாங்கு நிலை .