இந்த வார டிரேடிங் எல்லைகளாக 5690 - 6250 இருக்கலாம் , ஆனால் உடனயாக 6045 க்கு மேலும் தொடர்ந்து 6130 க்கு மேலும் சந்தை முடிவடைய வேண்டும் , அப்போது தான் மேல் எல்லைக்கு அருகில் வார வாய்ப்பு வரும் , 5850 நல்ல தாங்கு நிலையாக செயல்பட வாய்ப்புள்ளது , தவறினால் 5780 வரையிலும் பின் அடுத்த சரிவில் 5755 / 5720 ஆகிய புள்ளிகளை நோக்கி சரிய வாய்ப்பாகிவிடும் ,..
இறங்குமுக உடனடி (short -term)திசையில் சந்தை பயணித்தாலும் அதிக விற்பனை (oversold) பகுதியை அடைந்திருக்க வாய்ப்புள்ளது , சிறு மேல்நோக்கிய பயணம் இருக்க வேண்டும் , அதனால் வார தொடக்கம் +ஆக இருந்தால் 5850 ஐ இழப்பு நிறுத்தமாக கொண்டு 6045 புள்ளியை தொடும் வரை வாங்கி விற்கலாம் , கீழ் நோக்கிய பயணம் தொடருமானால் அப்புள்ளிக்கு அல்லது 6130 க்கு அருகில் கீழ் முக திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதால் திசைக்கு ஏற்ப மாறி கொள்வது அவசியம் ,சந்திப்போம்.