Saturday, October 16, 2010

தமிழிய சிந்தனை :-
பெரியார் வந்திராவிட்டால் தமிழர் வாழ்வில் இவ்வளவு விரைவாய் கல்வி வந்திருக்காது,
இன்று நம் இளைஞர்கள் IT துறை போன்றவற்றில் சம்பாதிப்பது இந்த கல்வியால்தானே ,
பெரியார் சொன்னதன் நோக்கமெல்லாம் செய்யும் செயலை அறிவுக்கண் கொண்டு பார்த்து பிறகு துவங்கு என்பதே, உள்நோக்கோடு ஆதிக்கம் செய்யும் கூட்டமொன்று வெளிநாட்டிலிருந்து வந்திங்கு கடவுளின் பெயரால் சிந்தனை மழுங்க, அறிவுக்கு ஏற்பிலாவற்றையும் பரப்பினர் , புகுத்தினர் , ஆங்கிலேயர் அடக்கி ஆண்டது புரிந்த நமக்கு இந்த ஆரியக் கூட்டத்தின் ஆதிக்கம் புரியவில்லை , வாழைபழத்தில் ஊசிபோல நம்மோடு ஒட்டி உறவாடி தமிழில் களைகளை புகுத்தி ஆயிரமாண்டுகளுக்கு மேலான இந்த வித செயல்களில் இருந்தோரை நாம் புரிந்துகொள்ள கடவுளை மறுத்தார் , வேர் போனால் மரம் போகுமில்லையா ? சிந்தித்தார் நமக்காக , இன்று நமக்கு அறிவு விடுதலை ஓரளவுக்கு பெற்றுள்ளோம் , தமிழர்கள்  பண்டிகைகள் கொண்டாடும்போது சிறிது சிந்தித்து செயல் படவேண்டும் , ஆதிக்க கூட்டத்திற்கு சாதகமான வற்றை தவிர்ப்பதே ,
நாம் அறிவு விடுதலை பெற்றதன் அடையாளம் ...

இந்த post -ஐ நண்பர் திரு .ராஜசேகரன் தூண்டலோடு இங்கு இடுகிறேன் ,சிறுசெயலேனும் சமுதாய கண்ணோட்டத்தில் செய்ய ஒவ்வொருவரும் ஆர்வம் காட்டினால் தியாகிகள்(துறவு) தேவை படமாட்டார்கள் ..உறவு பின் துறவு

இதுவே தமிழர் வாழ்வியல் தத்துவம் ... சிந்திப்போம் ....

No comments: