Friday, December 10, 2010

பங்கு வணிகமே தொழிலாக!

கடந்த ஞாயிறு அன்று நடந்த கருத்து வகுப்பில் கொடுத்த முக்கிய கருத்து "தொழில் முறை பங்கு வணிகர் " என்பது , பங்கு வணிகம் , மற்ற பொருள் வணிகங்களை போன்றதே என முதலிலேயே குறித்ததுதான் , ஒரு கூடுதல் வாய்ப்பு , பொருள் வணிகர் , கையில் உள்ள பொருளை மட்டும் விற்கலாம் , "இங்கே கையில் இல்லாத பங்கையும் விற்கலாம் , விலை குறையும் போது வாங்கி கொடுத்துவிடலாம்", இதை 'short selling' என்கிறோம் , ' short selling ' (விற்று-வாங்குதல்)செய்வோருக்கு குறைந்தபட்ச விலையை அறிந்துகொள்ளும் தொழில் நுட்பமுறை  தெரிந்திருக்க வேண்டாமா ? நுண்ணறிவு,தொடர் முயற்சி , அவசர உணர்வுகளை ஆளும் பொறுமை, சிறு இழப்புகளில் வெளியேற முடிவெடுக்கும் ஆளுமை , தொழில் நுட்ப கல்வியை கற்று கொள்ளும் தொடர் ஆர்வம் , நடைபெறுகிற சந்தையில் கற்றவற்றை பொருத்தி பார்க்கிற உடனே-தோன்றும் கூர்மை மதி, சிறிய அளவில் முதலிடும் திறன் இவைதான் ஒருவரை  தொழில் முறை வணிகராக மாற்றிக்கொள்ள தேவையானவை , சந்தையிலிட்ட முதலை நிர்வகிக்க தெரிந்தோரே
தொழில் முறை வணிகர் - " professional trader " பட்டறிவு தான் தரும் இந்த பட்டத்தை உங்களுக்கு , நாம் வழிகாட்டியே ....
இன்னும் சிந்திப்போம்,சந்திப்போம் ....

1 comment:

guna said...

நாம் வழிகாட்டியே ....
இன்னும் சிந்திப்போம்,சந்திப்போம் ....
thankyou thankyouo thankyou