Thursday, December 30, 2010

உடனடி இலக்கான 6100 ஐ தொட்டது NIFTY

 இனி என்ன ? படமாக .......
2011 - இனிய கிருத்துவ புத்தாண்டு வாழ்த்துகள்!

Monday, December 27, 2010

திக்கு தெரியாத காட்டில் மாட்டிகொண்டதா ? நிப்ட்டி

ஞாயிற்று கிழமை BSE நாணயம் இதழுடன் நடத்திய முதலீட்டாளர் நிகழ்ச்சியில் நாம் கலந்து கொண்டோம் , படம் இணைக்கப்படும் ,

இனி சந்தை : நீண்ட கால சுழலில் , நடுத்தர சுழலில் , உடனடி சுழலில் வாங்கி விற்கும் வணிக முறைகளில் சந்தை செயல் பட்டாலும் நடுத்தர சுழலில் சறுக்கி விற்று வாங்கும் முறைக்கு மாறிவிடுமோ என்ற நிலைக்கருகில் சந்தை தள்ளப்பட்டுள்ளதால் , நாணயம் இதழில் தொடர்ந்து NIFTY கணிப்பை எழுதும் Dr.கார்த்திகேயன் இந்தவாரம் விட்டு அடுத்தவாரம் எழுதுவதாக மேற்சொன்ன நிகழ்ச்சியில் சொன்னார் , சரி , நாம் என்ன வணிகம் செய்யலாம் ? என்பவர்களுக்கு 

திங்களுக்கான கணிப்பு : -
இந்த வார கணிப்பு : -

சந்திப்போம் .............................................................................................................................................


Saturday, December 18, 2010

சந்தையின் நிலைதான் என்ன ?

உடனடி சந்தை 6338 - 6069 - 5956  வழியாக வரும் நேர்கோடு உடைக்க படலாம் , உடைந்தால் புதிய உச்சத்தை நோக்கியமையும் பயணமாக தெரிகிறது ,சந்தை நிலைகுறித்து முன் சொன்னதை நினைவு கூர்வோம்,http://tamilpangusandhai.blogspot.com/2010/11/blog-post_07.ஹ்த்ம்ல்
சந்திப்போம்.....

Wednesday, December 15, 2010

உயரவா ? இந்த மென்மையான பயணம்

சந்தையை பொருத்தவரை படத்தில் உள்ளபடி மேல்முகத்தில் " trendline " தடுப்பை 5965 -5980  என்ற பட்டையை உடைத்தால் இன்று முதல் விரைவாக மேல்முகத்தில்  பயணிக்கும் , LONG SL 5840 க்கு நகர்நதுள்ளது, இன்று மிக முக்கிய  நாளாக கருதலாம் ,
 FI - நிதி நிறுவனகளின் செயல் செல்லிங் ஆக இருப்பின் இறங்குமுகம் தொடர வாய்ப்பு உள்ளது , 5980 க்கு அருகில் SHORT உருவாக்கலாம், உடைத்தால் 6100 வரை உடனடியாக உயர்வுக்கு வாய்ப்புள்ளதால் 5985 SL அவசியம் ,....

Sunday, December 12, 2010

கரடியின் பிடி தளர்கிறதா ?

கரடியின் பிடி தளர்கிறதா ?ஆம் என்றால் ,5935 - 40 பட்டையில் உள்ள தடுப்புகளை உடைக்கும் , உடைக்க இயலாதெனின் உடனடியாக 5770 க்கு அருகிலுள்ள தாங்குநிலையை உடைத்து 5660 என்ற புள்ளியை நோக்கி பயணம் தொடர்ந்து 5640 /5580 என பயணிக்கும் , short வைத்துள்ளோருக்கான SL  5950 இதை சந்தை உடைத்தால் வாங்கி விற்கும் "buy-sell" முறைக்கு வணிகத்தை மாற்றிக்கொள்ளலாம் ,நாளை 5878 - 5890 க்கு அருகில் கீழ் முகம் திரும்பினால் short செய்யலாம் , SL முன்சொன்னதுதான், உடனே  "buy-sell" முறைக்கு வணிகத்தை மாற்ற விரும்பினால் 5770 ஐ SL வைப்பது அவசியம் ,....

Friday, December 10, 2010

பங்கு வணிகமே தொழிலாக!

கடந்த ஞாயிறு அன்று நடந்த கருத்து வகுப்பில் கொடுத்த முக்கிய கருத்து "தொழில் முறை பங்கு வணிகர் " என்பது , பங்கு வணிகம் , மற்ற பொருள் வணிகங்களை போன்றதே என முதலிலேயே குறித்ததுதான் , ஒரு கூடுதல் வாய்ப்பு , பொருள் வணிகர் , கையில் உள்ள பொருளை மட்டும் விற்கலாம் , "இங்கே கையில் இல்லாத பங்கையும் விற்கலாம் , விலை குறையும் போது வாங்கி கொடுத்துவிடலாம்", இதை 'short selling' என்கிறோம் , ' short selling ' (விற்று-வாங்குதல்)செய்வோருக்கு குறைந்தபட்ச விலையை அறிந்துகொள்ளும் தொழில் நுட்பமுறை  தெரிந்திருக்க வேண்டாமா ? நுண்ணறிவு,தொடர் முயற்சி , அவசர உணர்வுகளை ஆளும் பொறுமை, சிறு இழப்புகளில் வெளியேற முடிவெடுக்கும் ஆளுமை , தொழில் நுட்ப கல்வியை கற்று கொள்ளும் தொடர் ஆர்வம் , நடைபெறுகிற சந்தையில் கற்றவற்றை பொருத்தி பார்க்கிற உடனே-தோன்றும் கூர்மை மதி, சிறிய அளவில் முதலிடும் திறன் இவைதான் ஒருவரை  தொழில் முறை வணிகராக மாற்றிக்கொள்ள தேவையானவை , சந்தையிலிட்ட முதலை நிர்வகிக்க தெரிந்தோரே
தொழில் முறை வணிகர் - " professional trader " பட்டறிவு தான் தரும் இந்த பட்டத்தை உங்களுக்கு , நாம் வழிகாட்டியே ....
இன்னும் சிந்திப்போம்,சந்திப்போம் ....

Sunday, December 5, 2010

கரடிகள் காத்திருக்கின்றன , கவனம் மிக அவசியம் ! ?

சந்தை மேல்முக பயணத்தை வெற்றிகரமாக தொடரவேண்டுமானால் நாளை 5970 க்கு மேல் LOW பதிவு செய்து 6020 / 6040 /6060 என்று மேல்முக இலக்குகளை கடக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது , இந்த வாரத்தை பொறுத்தவரை 5920 புள்ளியை உடைக்க கூடாது , கரடிகள் களமிறங்கி வைக்கிற விருந்தில் காளைகளும் கலந்து கொள்ளும் புள்ளி அது , முன்பாக 5970 என்ற புள்ளி உடைந்தாலே எச்சரிக்கை மணி அடிப்பதாக வைத்துகொள்ளலாம் , பயணம் புதிய உச்சத்தை நோக்கி அமைய வேண்டுமானால் 6090 ஐ முதலில் கடக்க வேண்டும் , அப்படியானால்  நாளை...(முதலிலிருந்து படிக்கவும்) , buy- sell செய்ய விரும்பினால் ஒரு PE வைத்துகொண்டு / அல்லது 5970 SL ஆக வைத்து கொள்ளவும் , 6040 தாண்ட மறுத்தால் விருந்தில் கலந்து கொள்ள தயாராக இருங்கள் ...  சந்திப்போம் ...

Thursday, December 2, 2010

தொடரும் .... பயணம் ?

5690 லிருந்து வளரும் சந்தை தன் பயணத்தை தொடருமா ?முன் சொன்னபடியே சில நாட்களாக buy -sell  போக்கிலேயே உள்ளதாலும் , வேறு சில பணிகளில் சிக்கி கொண்டதாலும் எழுத இயலவில்லை , இந்த பயணம் முடிவடைய 6005 / 6020 / 6090 ஆகிய புள்ளிகள் தடுப்பாக உள்ளன . இவற்றை கடந்தால் புதிய உச்சம் நோக்கிய பயணமாக மாற வாய்ப்புள்ளது ,இடையில் தடுப்புகள் உள்ளன , அவப்போது  அவற்றை பார்ப்போம் , அதுவரை  buy -sell  போக்கிலேயே செல்லலாம் , இதற்கான உடனடி SL 5890 ஐ வைக்கவும் . சந்திப்போம் ...